குஜராத் தேர்தலில் பா.ஜ.க முன்னிலையில் இருந்த பல்வேறு தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைவுடனே இன்றைய பங்குச்சந்தை ஆரம்பித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 663.83 புள்ளிகள் குறைந்து 32,799 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில்  பா.ஜ.க முன்னிலை முன்னிலை பெற்று வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க - 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 87 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது. 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில்  பா.ஜ.க முன்னிலை வகித்தாலும் காங்கிரஸுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க-80 தொகுதிகளிலும், காங்கிரஸ் 72 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது. 

தூத்துக்குடி மாவட்டம் மருதூரைச் சேர்ந்த ரமேஷ், பொன்னன்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாலும் ஆட்சியர் வெங்கடேஷின் பரிந்துரைப்படி இருவருக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

குஜராத்தில் மொத்த தொகுதி -68/182
பாஜக -44
காங்கிரஸ்+ - 24
மற்றவை- 0

ஹிமாச்சல் மொத்த தொகுதி -15/68
காங்கிரஸ்-3
பாஜக -6
மற்றவை-1

 

திங்கட்கிழமை தாமதமாக எழுந்து அரக்கப்பறக்க அலுவலகம், கல்லூரி செல்லாமல், நேரமே எழுந்து உற்சாகமாக இந்நாளை எதிர்கொள்ளுங்கள். உங்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களை சுற்றி இருப்பவர்களையும் ஆட்கொள்ள வேண்டும். புதிய வாரம், புதிய நாள், மென்மையான கதிர்களை வீசி கொண்டிருக்கும் சூரியனுக்கு ஒரு வணக்கம் போட்டு, நாளை தொடங்குங்கள்! 

குஜராத் மற்றும் இமாசலபிரதேச மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைவதையடுத்து இந்த 2 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இரு மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதில், தேர்தல் ஆணைய விதிக்கு புறம்பாக ராகுல் காந்தி பேட்டி கொடுத்ததாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தற்போது, அந்த நோட்டீஸை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 74 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமாரும், பெண்களுக்கான 62 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கும் தங்கம் வென்றனர்.

கோயம்புத்தூரில் பேசிய தண்ணீர் மனிதர் ராஜேந்தர் சிங், 'ஈஷா யோகா  மையம் சார்பாக ஜக்கிவாசுதேவ் நடத்திய (rally for rivers) நதிகளை மீட்போம். நெடும் பயணம் உண்மையில் நதிகளை மீட்பதற்கான திட்டம் கிடையாது. அது மக்களிடமிருந்து நிலத்தைப் பிடுங்குவதற்கானத் திட்டம். ஜக்கிவாசுதேவ் சீக்கிரமே சிறைக்குச் செல்வார்' என்றார்.

நாடாளுமன்றத்தில் திருக்குறள் நிகழ்வின் இரண்டாம் ஆண்டு விழா கரூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, திருக்குறள் முற்றோதல் செய்யும் இயக்கத்தை புதுதில்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூரில் பேசிய விக்ரமராஜா, 'அதிகாரிகளின் அலட்சியத்தால்தான், திருச்செந்தூர் கோவில் கட்டிட விபத்து நடைபெற்றது. இதனைக் காரணம் காட்டி, வியாரிபாரிகள் பிழைப்பில் கைவைப்பது நியாயம் இல்லை. 40 வருடமாக கடையை வைத்து பிழைப்பு நடத்திவிட்டு திடீரென, ஒரே நாளில் காலி செய் என்றால் எப்படி முடியும்?' என்றார். 

கோவாவின் வாஸ்கோ நகரில் பாப்லோ என்ற நிறுவனம் மது குடிக்கும் போட்டி நடத்துகிறது. இந்தப் போட்டிக்கு நுழைவு கட்டணமாக 500 ரூபாயை நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டி நடத்துவதற்கு கோவா பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியை தடை செய்யவேண்டும் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் 110 ரன்கள் குவித்தார். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தவான் 4,000 ரன்களைக் கடந்தார். 95 இன்னிங்ஸ்கள் மூலம் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த தவான், விராட் கோலி (93 இன்னிங்ஸ்கள்) அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 

 

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளுக்கு சிறப்பு நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும், அதிக பாதிப்புக்குள்ளாகும் தமிழகம் மற்றும் கேரள கடற்பகுதிகளில் சுவர் எழுப்ப வேண்டும்’ என்று ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சேதுநாராயணபுரத்தில் உள்ள பாலத்தை தனியார் பேருந்து கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக பேருந்து  கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் தங்கம் வென்றுள்ளார். 74 கிலோ ஃப்ரிஸ்டைல் எடைப் பிரிவில் அவருக்கு தங்கம் கிடைத்துள்ளது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளுக்குத் திரும்பிய அவர், நியூசிலாந்தின் ஆகாஷ் குல்லாரை வீழ்த்தி தங்கம் வென்றார். 

 

குட்கா விவகாரத்தில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்களுக்கு யாரும் களங்கம் விளைவிக்க வேண்டாம், என தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் அறிக்கை விட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரனை மேற்கொண்டு வரும்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் சுப்பன் தெரு ராகவன் காலனியில் முத்துக் காமாட்சி, சாவ்லா ராம் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு, இரு சக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வந்து விசாரணை செய்தார்.

 

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆஞ்சநேய கோயில்களிலும் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

 

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இலங்கை அணி நிர்ணயித்த 216 ரன்கள் இலக்கை இந்தியா, 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. தவான் 100 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும் எடுத்தனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்கள் மற்றொரு படிவத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு பற்றி தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்றும் வாக்காளர் எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாகவும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புகார். 

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியின் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து, 4 விக்கெட்டுகளுக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி, ஆஸ்திரேலியாவை விட இன்னும் 127 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆஸி.,யின் முதல் இன்னிங்ஸின் போது, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இரட்டை சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர் பதவியேற்கக் குறைந்தபட்ச கல்வித் தகுதியைத் தேர்தல் ஆணையம் அவசியமாக்க வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். மேலும், அமைச்சர் ஆவதற்கான குறைந்தபட்ச வயதை 25-லிருந்து 35 அல்லது 40-ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தரவேண்டிய காவிரித் தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, "தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் வழங்க முடியாது" என கர்நாடக அரசு பதில் அனுப்பியுள்ளது.