Cinema


அக்டோபரில் நடைபெறவிருக்கும் நாக சைதன்யா- சமந்தாவின் திருமணத்தை தமிழ், தெலுங்குத் திரையுலகம் எதிர்பார்ப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஜோடிகளின் திருமணத்துக்காக, சமீபத்தில் நடந்த ஃபோட்டோ ஷூட் தான் ஆன்லைன் ஹிட் லிஸ்ட்டில் டாப். குறிப்பாக சமந்தாவின் லெஹங்காவுக்கு லைக்குகள் தெறிக்கின்றன.

விஷால் நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள படமான சண்டக்கோழி-2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. படத்துக்கான பூஜையுடன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. படக்குழுவினர் அனைவரும் இப்படப்பிடிப்புப் பூஜையில் கலந்துகொண்டனர்.

தளபதி விஜய் நடித்து, அட்லீ இயக்கி,தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படமான மெர்சல் படத்தின் டீசர் இன்று அட்லீயின் பிறந்தநாளையொட்டி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. விவேகம் படத்தின் டீசர் உலகத்தின் அதிக லைக்ஸைப் பெற்றுள்ளதால் இந்தப் படம் அதை முறியடிக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவுகிறது.

இயக்குநர் அட்லீ இன்று தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தற்போது விஜய் நடிப்பில் 'மெர்சல்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் அட்லீயின் பிறந்தநாள் பரிசாக இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. மெர்சலான இயக்குநருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

'கபாலி' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'காலா'. நடிகர் தனுஷின் 'வண்டர்பார் ஃபில்ம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  ரஜினி தன் குடும்பத்தினர் அனைவருடனும் இருப்பதுபோல புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அடுத்த வாரம் ஆயுத பூஜையையொட்டி விஜய் சேதுபதியின் 'கருப்பன்', நயன்தாராவின் 'அறம்', மகேஷ் பாபுவின் 'ஸ்பைடர்', கெளதம் கார்த்திக் நடிக்கும் 'ஹர ஹர மகாதேவகி' படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. மேலும் நாளை மறுநாள் 11 படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.

1888-ல் ஏற்பட்ட புயல் காரணமாக 'விஜில்' என்ற கப்பல், 700-க்கும் மேலான பயணிகளோடு மர்மமான முறையில் காணாமல்போனது. இதை மையமாக வைத்து, த்வானி மேதா இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் 'விஜில்: தி மிஸ்ட்ரி ஆஃப் தி ஃபான்டம் ஷிப்' படத்தில் விஞ்ஞானியாக, ராணா ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் டீசர் 21-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று டீசர் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்தப் போஸ்டரில் காளை மேல் விஜய் கை வைத்து நிற்க, அருகில் நித்யாமேனன் ஒரு குழந்தையைக் கையில் வைத்திருக்கிறார். அந்தப் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் 'பத்மாவதி.' தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உட்பட பலர் நடிக்கிறார்கள். ராஜா காலத்துக் கதை என்பதால், ஷாகித் கபூர் வாள்வீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் எடுத்த புகைப்படம், டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வினோத் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் ’தீரன் அதிகாரம் ஒன்று.’ இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் வருகின்ற 27-ம் தேதியும், ட்ரெய்லர் அடுத்த மாதம் 17-ம் தேதியும், படம் நவம்பர் 17-ம் தேதி திரைக்கு வருகிறது.

'வொண்டர் வுமன்’ படத்தில் நடித்த கால் கேடட் பலருக்கும் பிடித்தமான சூப்பர் ஹீரோவாகத் திகழ்ந்தார். 'எனக்குள் இருக்கும் வொண்டர் வுமன் நன்றாக வளர்ந்துவிட்டார். அந்தக் கதாபாத்திரத்துக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறேன். இதன் பிரதிபலிப்பை, வெளியாக இருக்கும் 'ஜஸ்டிஸ் லீக்' படத்தில் காணலாம்' என்றார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில், என்.ஆர்.ரகுநந்தன் இசையில் உருவாகிவரும் படம் 'கொடிவீரன்'. இதி்ல் சசிக்குமார், மஹிமா உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் 'அய்யோ அடி ஆத்தே' என்ற பாடல் வரி வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ரேனிகுண்டா படத்தை இயக்கிய இயக்குநர் பன்னீர்செல்வம், விஜய்சேதுபதியுடன் இணைந்துள்ளப்படம் 'கருப்பன்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜைக்கு படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

 

குஷ்பு, மீனா, பானுப்ரியா எனப் பல முன்னணி நடிகைகளும் டி.வி சீரியல், ரியாலிட்டி ஷோ எனக் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் தற்போது ரேவதியும். 'அழகு' என்கிற கிராமத்துக் கதைக்களம் கொண்ட ஒரு சீரியலில் நடிக்கவிருக்கிறார். இந்த சீரியலில் இவரின் கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள படம்  'ஸ்பைடர்'. இப்படத்துக்குத் தணிக்கைக் குழு எந்த ஒரு சென்சார் கட்ஸ்ஸும் செய்யாமல் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகிறது.

சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம்  'தானா சேர்ந்த கூட்டம்'. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவிடம் பேசிய போது, 'நான் எனது படத்துக்கு 'அநீதிக் கதைகள்'ன்னு பெயர் வைக்கவேஇல்லை. நீங்களாக முடிவு செஞ்சா எப்படி? சூப்பர் டீலக்ஸ் தான் என் படத்தின் பெயர். இந்தப் படத்துக்கான திரைக்கதையை மிஷ்கின், நீலன் சேகர், நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்' என்றார்.

'தெறி' வெற்றிக்கு பிறகு  விஜய்-அட்லீ  கூட்டணி இணைந்துள்ள படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த  இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர்  வரும் செப்டம்பர் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு  வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அறிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியாகியுள்ளது. இதில், அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் அதில் நடிக்க இருக்கிறார்கள். மெகா பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்க இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 

சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் கிஷோர் நடித்துள்ள 'எச்சரிக்கை - இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சர்ஜுன் இயக்கியுள்ள இப்படத்துக்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் கமல்ஹாசன், 'நான் தொழிலுக்காக நடித்து வருகிறேன். ஆனால், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயாராக இருக்கிறேன். அரசியலுக்கு வந்தபின் ரஜினியிடம் அரசியல் குறித்து பேசுவேன்' என்றார். 

அஜித் நடித்த 'விவேகம்' கடந்த மாதம் வெளியானது. மே 10-ல் வெளியான இப்படத்தின் டீசர் 5 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேலான லைக்ஸ் பெற்று உலக அளவில் அதிகமாக லைக்ஸ் பெற்ற திரைப்பட டீசர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 'ஸ்டார் வார்ஸ்-தி லாஸ்ட் ஜெடி' பட டீசர் அதிக லைக்ஸ் வாங்கியதாக இருந்தது. 

விக்ரம் அடுத்து நடிக்க இருப்பது, ராம் இயக்கத்தில். மாறுபட்ட கதைக்களங்களில் படம் இயக்கும் ராமும் விதவிதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதால், நிச்சயம் சினிமா ரசிகர்களுக்குத் திருப்திகரமான படமாக இது இருக்கும் என நம்பலாம். 

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'துப்பறிவாளன்' படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், அதை செல்போனில் பதிவு செய்து பரப்புவதைத் தடுப்பதற்காகவும் அப்படி பதிவு செய்பவர்களைக் கண்காணித்து காவல் துறையினரிடம் பிடித்துக் கொடுக்கவும் தமிழகமெங்குமுள்ள விஷால் நற்பணி இயக்கம் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், வரும் 16-ம் தேதி மார்க்சிஸ்ட் விழா நடக்க உள்ளது. இதில் கமல் சிறப்பு விருந்தினராகப் பங்குபெறுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கமல், 'அக்டோபர் மாதம் வரை சனிக்கிழமைகளில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பேன். அந்த விழா நல்லபடியாக நடக்க என்னுடைய வாழ்த்துகள்’ என்றுள்ளார்.