கச்சா எண்ணெய் சர்வதேசச் சந்தையில், கடந்த வாரம் மிகப்பெரிய இறக்கம்கண்டது. உற்பத்தி செய்யப்படும் எண்ணெயைச் சேமிக்க இடமில்லை என்பதால்தான் விலை சரிந்தது.என்றாலும், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்தது மற்றொரு பெரும் காரணம்.