கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் அனைத்துப் பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்தன. அப்போது எலான் மஸ்க்கின் டெஸ்லாவின் பங்குகளும் வீழ்ச்சி அடைந்தன. ஆனால், தற்போது வீழ்ச்சியடைந்ததை விட இரண்டு மடங்கு கூடுதல் விலையை டெஸ்லா பங்குகள் பெற்றுள்ளன. மின்சாரம் மூலம் இயங்கும் கார்களைத் தயாரித்து வரும் டெஸ்லா நிறுவனமானது ஆரம்பம் முதலேயே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.