ஆண்களுக்கு டேவிஸ் கோப்பை போல மகளிர் டென்னிஸில் ஃபெட் கோப்பை போட்டி (Fed Cup) நடைபெறும். 1963 முதல் இப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தன்னுடைய நாட்டுக்காகச் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ஐடிஎஃப்) சார்பாக ஹார்ட் விருது வழங்கப்படும். 2009 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த வருடம் ஹார்ட் விருதுக்கான ஆசிய-ஓசியானா மண்டலத்திலிருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்சா தேர்வாகியுள்ளார்.

TamilFlashNews.com
Open App