டிக்டாக் செயலிக்கு மாற்றாகப் புதிய திட்டத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான Zee களமிறங்க உள்ளது. ஜீ நிறுவனத்தின் Zee5 செயலின் அங்கமாக ஜூலை முதல் வாரத்தில் இது வெளியிடப்படும் என நம்பப்படுகிறது. முழுக்க முழுக்க இந்திய பயனாளர்களைக் குறிவைத்து பல்வேறு புதிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.