சிதம்பரம் வெங்கடேச தீட்டிதர், `ஆனித் திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகம். நடராஜருக்கான ஆறு அபிஷேகங்களில் ஒன்று. எனவே, உத்திர நட்சத்திரம் வரும் நாளில் இதைச் செய்வது வழக்கம்.சிதம்பரத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிகாலை வேளையில் இந்த அபிஷேகம் நடக்கும். அதன்படி, நாளை மறுநாள் 28.6.20 அன்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கும் இந்த அபிஷேகம், காலை 7 மணி வரை நீடிக்கும்” என்றார்.