முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதன் டிஜிட்டல் பாய்ச்சலின் அடுத்த முயற்சியாக 'Jio Meet' என்னும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவையை அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது. முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்தச் செயலி நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியுள்ளது. காரணம் இதன் வடிவமைப்பு அப்படியே ஜூம் போன்றே இருப்பதுதான். ஜியோ தரப்பு இதுகுறித்து எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.