இந்து அறநிலையத்துறை சார்பாக திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்கப்படும் என்ற செய்தி இரண்டு நாள்களுக்கு முன்பாக வெளியானது. ஆனால் முதலமைச்சர் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பையொட்டி கோயில்களுக்கு அனுப்பப்பட்ட கடித நகல் தான் சமூக ஊடகங்களில் வைரலானது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டபோது, `அதற்கான அரசாணை இன்னும் வெளியிடவில்லை’ என்றார்.