விழுப்புரத்துக்குத் தெற்கே 22 கி.மீ. தொலைவில் பரிக்கல் அமைந்துள்ளது. அங்கு அருள்மிகு லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாடி வருவோரின் பிணிகளைப் போக்கும் திருத்தலங்களில் பரிக்கலும் ஒன்று. அபூர்வ சக்தி வாய்ந்த பலன்களைத் தரும் கண்கண்ட மகத்தான திருத்தலம். பரிக்கல் நரசிம்மர், மிகப் பெரும் கடன் தொல்லைகளிலிருந்து மீளவும், உடலிலுள்ள நோய்கள் நீங்கி நலம் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அபாயங்களிலிருந்து மீளவும் அருள்புரிபவர்.