ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்கள் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாகப் பல காலமாக இருந்துவருகிறது சாம்சங். உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் சாம்சங்கின் டிஸ்ப்ளேவையே அதன் போன்களில் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விடக் குறைவான OLED டிஸ்ப்ளே பேனல்களை மட்டுமே வாங்கியதால், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து 950 மில்லியன் டாலர் வரை சாம்சங் நிறுவனம் அபராதம் வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.