பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மிகப்பெரிய ஹேக்கிங் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகின் மிக முக்கிய புள்ளிகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு  பிட்காயின் கேட்டு பதிவுகளிடப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வாரன் பஃபெட், பில் கேட்ஸ், எலான் மஸ்க் உட்பட பல பிரபலங்களின் கணக்குகள் இதில் அடங்கும். இது அல்லாமல் உபேர், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன.

TamilFlashNews.com
Open App