எப்போதுமே பண நெருக்கடியிலிருக்கும் உதவி இயக்குநர்களின் நிலை கொரோனா சூழலில் இன்னும் மோசமாகியிருக்கிறது. ‘மாஸ்டர்’, ‘வலிமை’ எனப் பெரிய படங்களில் பணிபுரிந்துவரும் உதவி இயக்குநர் களுக்கான சம்பளத்தை அந்தந்தத் தயாரிப்பு நிறுவனங்கள்தான் கொடுத்துவந்தன. ஆனால், இப்போதைய சூழலில் அடுத்தடுத்த மாதச் சம்பளத்தைத் தருவது கஷ்டம் என நிறுவனங்கள் கைவிரிக்க, வேறு புராஜெக்ட்டுக்கும் செல்ல முடியாமல், இதையும் முடித்துக் கொடுக்க முடியாமல் உதவி இயக்குநர்கள் தவிக்கிறார்கள்.

TamilFlashNews.com
Open App