சமீபத்தில் தி.மு.க இளைஞரணி தரப்பிலிருந்து முக்கிய பிரமுகர் ஒருவர் தே.மு.தி.க கிச்சன் கேபினட் தரப்பைச் சந்தித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அமைந்தகரையிலுள்ள பங்களா ஒன்றில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், `சீட் பங்கீடு குறித்து கவலை வேண்டாம்; கெளரவமான எண்ணிக்கையில் தருவோம். முதலில் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளுங்கள்’ என்று இளைஞர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டதாம். நல்ல தகவலுக்காகக் காத்திருக்க சொல்லியிருக்கிறதாம் கேப்டனின் கிச்சன் கேபினட்.

TamilFlashNews.com
Open App