வியட்நாமில் உள்ள டா நாங் எனும் பகுதியில் சுமார் 100 நாள்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வியட்நாமில் இதுவரை 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.