சைக்ளோஸ்போரா கெய்டனென்சிஸ் என்ற சிறிய ஒட்டுண்ணியால் ஏற்படும் குடல் தொற்றான சைக்ளோஸ்போரா என்ற நோயால் அமெரிக்காவின் 11 மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இது மாசுபட்ட பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் மனித உடலுக்குள் செல்கிறது, கடுமையான வயிற்றுப்போக்கு இதன் அறிகுறியாக உள்ளது. ஃபிரஸ் எக்ஸ்பிரஸ் என்ற சில்லறை நிறுவனத்தால் விற்கப்பட்ட சாலட் சாப்பிட்டதன் மூலம் சுமார் 600-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.