கொரோனா ஊரடங்கிலும்  கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் நடிகர்கள் சூரி மற்றும் விமல் உள்ளிட்டோர் மீன்பிடித்த படங்கள் வெளியானது. இதையடுத்து அவர்கள் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில் அவர்கள் இ-பாஸ் இல்லாமல் வந்ததும் ஏரியில் மீன்பிடித்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  விமல், சூரி உள்ளிட்டோர் மீது தொற்றுநோய் பரவும் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App