திருச்சியைச் சேர்ந்த `அறம் மக்கள் நலச்சங்க’த்தின் தலைவர் ராஜா சமீபத்தில்  பா.ஜ.க-வில் இணைந்தார். அடுத்த சில நாள்களிலேயே ராஜா, அவரின் தம்பி ரமேஷ் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்பது பேர்மீது மோசடி வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள பா.ஜ.க-வில் இணைவதாகச் சர்ச்சை எழுந்தது.  பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், `குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு பா.ஜ.க ஒருபோதும் துணை போகாது’ என்றார்.

TamilFlashNews.com
Open App