உலகின் பத்தில் எட்டு போன்கள் இன்று ஆண்ட்ராய்டில்தான் இயங்குகின்றன. ஐஸ்கிரீம், ஜெல்லி பீன், ஓரியோ என ஒவ்வொரு வெர்ஷனுக்கும் உணவுப்பொருள்களின் பெயர்களைச் சூட்டிவந்த கூகுள், கடந்த வருடம் இந்த டிரெண்டை உடைத்து ‘ஆண்ட்ராய்டு 10’ என்ற பெயரே வைத்தது. வெளியில் இப்படி என்றாலும், உள்ளே இன்னும் உணவுப்பெயர்கள் வைத்து அதைக் குறிப்பிட்டுதான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறதாம் ஆண்ட்ராய்டு டீம். அப்படி தற்போதைய ‘ஆண்ட்ராய்டு 11’-ன் பெயர் ‘ரெட் வெல்வெட் கேக்’. 

TamilFlashNews.com
Open App