கடந்த இரண்டு வாரங்களின் தரவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சராசரியாக ஒவ்வொரு நாளும் அதாவது ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் சுமார் 5,900 பேர் உயிரிழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கணக்கின்படி, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 247 பேர் அதாவது 15 வினாடிக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.