நீலகிரியில் 4வது நாளாக இடைவிடாது பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. ஊட்டி, குந்தா, கூடலூர் பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள், குடியிருப்புகள், சாலையின் குறுக்கே எனப் பல இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. மரங்கள் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதே போல் மரம் விழுந்ததில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். விழும் மரங்களை உடனுக்குடன் மீட்புக் குழுவினர் அகற்றினாலும் தொடர்ந்து மரங்கள் விழுந்த வண்ணமே உள்ளன. 

TamilFlashNews.com
Open App