அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இதைச் சிறப்பிக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ராமரின் உருவப்படம், உருவாகவுள்ள கோயிலின் மாதிரிப்படத்தை வெளியிட்டனர். அங்கு வாழும் இந்தியர்கள் இதன் முன்பு கூடி `ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களையும் எழுப்பிக் கொண்டாடியுள்ளனர்.