ஷாவ்மி நிறுவனம் சமீபத்தில்தான் அதன் Mi Box 4K சாதனத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. எந்த டிவியையும் ஆண்ட்ராய்டு டிவியாக மாற்றும் இந்தச் சாதனம் 3,499 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது. இப்போது இதன் தொடர்ச்சியாகப் புதிய Mi Tv Stick சாதனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது ஷாவ்மி. கிட்டத்தட்ட Mi Box 4K-ல் இருக்கும் அம்சங்கள் அனைத்தும் இதிலும் இருக்கிறது.