சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருக்கான ரேஸ் நடந்து கொண்டிருந்தபோதே கு.க.செல்வத்தை அழைத்த ஸ்டாலின், ‘பொறுப்புக்குழு போடலாம்னு இருக்கேன்யா. உன்னைத் தலைவராக நியமிக்க முடிவு செஞ்சிருக்கேன்’ என்றாராம். இதில் கொஞ்சம் உற்சாகமாக இருந்துள்ளார் செல்வம். ஆனால், திடீரென உதயநிதி தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டு சிற்றரசுவை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்துவிட்டனர்.  வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் இல்லை என்பதையும் சூசகமாகத் தெரிந்துகொண்டிருக்கிறார். இந்தக் கோபத்தில்தான் அறிவாலயம் செல்வதைத் தவிர்த்துள்ளார். 

TamilFlashNews.com
Open App