பாரதிராஜா இயக்கும் புதுப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் ராதிகா. ‘கிழக்கே போகும் ரயில்’ தொடங்கி ‘தாஜ்மஹால்’ வரை பல பாரதி ராஜாவின் படங்களில் நடித்தவர் ராதிகா. இப்போது பாரதிராஜா இயக்கும் இந்தப் படத்துக்கு ‘ஆத்தா’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் திரைக்கதையில் பணியாற்றச் சொல்லி வெற்றிமாறனிடம் கூறியிருக்கிறாராம் பாரதிராஜா. இசை இளையராஜா. வைரமுத்து விடமும் பாரதிராஜா பேசி வருகிறாராம். இது சரியாக அமைந்தால், பாரதிராஜா-இளையராஜா- வைரமுத்து என்ற எவர்கிரீன் கூட்டணி பல வருடங்கள் கழித்து இணையும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

TamilFlashNews.com
Open App