கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியின் கீழ் புதிய பணிகளை துவக்குவதற்கு, கரூர் நகராட்சி ஆணையர் சுதா முட்டுக்கட்டை போடுவதாக கூறி, கரூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று கரூர் எம்.பி ஜோதிமணி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது, பரபரப்புக்கு வித்திட்டது. ‘இந்த தடை சம்பவங்களுக்குப் பின்னால், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருக்கிறாரா என்ற ஐயம் எழுந்துள்ளது’ என ஜோதி மணி தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App