'லெபனான், பெய்ரூட்டில் வெடிப்பு நடந்தபோது மருத்துவமனையில் இருந்த கிறிஸ்டல் சவாயா என்பவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. கிறிஸ்டலின் கணவர் ரத்தக் கறைப் படிந்த ஆடையை அணிந்து முகத்தில் ரத்தக் காயங்களுடன் தன் குழந்தையை அணைத்து பாதுகாப்பாக வைத்துள்ளார்.