கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இருவரும் நேற்று காலை, ஹெலிகாப்டர் மூலம் மூணாறு வந்தடைந்தனர். முதலில், நிலச்சரிவில் சிக்கி, படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும், நபர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து, நிலச்சரிவு நடந்த பெட்டிமுடிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். பினராயி விஜயன், ` பெட்டிமுடியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், வேறு இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்’ என்றார். 

TamilFlashNews.com
Open App