கோவை மாவட்டத்தில் கணபதி பேருந்து நிலையத்தில் தேசியக்கொடியை ஏற்றி பா.ஜ.க-வினர் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். இதில், பா,ஜ.க கணபதி மண்டலத் தலைவர் வெங்கடேஷ் கலந்துகொண்டார். அப்போது, பா.ஜ.க கட்சிக் கொடியை ஏற்றும் கொடிக் கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர். இது தொடர்பாக போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் உள்ளிட்டோர்மீது தேசியக்கொடி அவமதிப்புச் சட்டத்தின்கீழ் சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.