விநாயகர் சதுர்த்தி விழா முதுமலையில் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலைச் சுற்றி வலம் வந்தும், கால்களை உயர்த்தியும் யானைகள் விநாயகரை வணங்கின. யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டது.