இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை நடத்திவருகிறார். பலமுறை பாகிஸ்தானிடம் இந்தியா இது குறித்துத் தகவல் அளித்தும், பாகிஸ்தான் தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இல்லை என வாதம் செய்துவந்தது. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக கராச்சியில் தாவூத் இருக்கும் முகவரி வரை வெளியிட்டிருக்கிறது பாகிஸ்தான்.

TamilFlashNews.com
Open App