பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். பின் அவர் செய்தியாளர்களிடம், 'மாநிலத்துக்கு தேவையான, உதவிகளை செய்ய வேண்டிய நிலையில் மத்திய அரசு இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு தேவையான உதவிகளை செய்வதற்காகவே பிரதமரைச் சந்தித்தோம். தமிழக அரசியல் குறித்து பேசவில்லை' என்றார்.