ஐபிஎல் குவாலிஃபயர் 2-வில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட் செய்த கொல்கத்தா ஆரம்பம் முதலே சொதப்பியது. இதனால், அந்த அணி 18.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கரண் சர்மா 4, பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் மும்பை களமிறங்க உள்ளது.