இன்று நடந்த ஐபிஎல் குவாலிஃபையர் போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் மோதின. மும்பை அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 107 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 14.3 ஓவர்களில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.