நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இடைகாலில் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பாக ஹிந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு தொடர்பான பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பங்கேற்று உரையாற்றினார்.