கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூா் பொலவபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பஞ்சு அரவை ஆலையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான சுமாா் மூன்று டன் பஞ்சு பேல்கள் தீயில் கருகின. தீயணைப்புத்துறையினா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.