நெல்லை, கடையநல்லூரைச் சேர்ந்தவர், குமார், குவைத்தில் வேலைக்காக சென்றார். அவரது விசா காலம் முடிந்த பின்னரும் அங்கேயே சட்ட விரோதமாகத் தங்கி வேலை செய்துள்ளார். அதனை அங்குள்ள அதிகாரிகள் கண்டுபிடித்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தந்தை இறந்ததற்குக் கூட வரமுடியாததால் அவரை மீட்குமாறு உறவினர்கள் கதறுகின்றனர்.