தொடர் சரிவில் இருந்து வந்த இந்தியப் பங்குச்சந்தை இன்றைய வர்த்தக முடிவில் அதிகரித்து நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 255 புள்ளிகள் உயர்ந்து 31,311 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 9,657 புள்ளிகளாகி நின்றது.