கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் மேடை நாடகங்கள், இன்னிசை கச்சேரிகள் நடத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து கலைஞர்கள் நல இயக்கம் சார்பில் மேடை கலைஞர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.