கூர்க்கா மக்களின் போராட்டத்தில் இறந்த 3 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று டார்ஜிலிங்கில் பேரணி நடைபெற்றது. இதில் கூர்க்கா இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து 10 நாளாக அங்கு போராட்டம் நடைபெறுகிறது.