மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்களின் வலையில் மெகா சைஸ் மீன்கள் சிக்கின.15 கிலோ எடை கொண்ட கடல் உறா என்னும் ஒரு மீன் ரூ.5000-க்கு விலை போனது. அதே போல் பெரிய கணவாய் மீன் ஒவ்வொன்றும் 3 கிலோ எடை அளவில் சிக்கியது. மீன்களின் அதிக வரத்தால் மீனவர்கள் மகிழ்ந்தனர்.