தூத்துக்குடி மாவட்டம் இனாம் மணியாச்சி அருகிலுள்ள இந்திரா நகரில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், அதிக விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. சீரான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி இக்கிராம மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.