கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் என்ற இடத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது அடையாறு ஆனந்தபவன் உணவகம். ஓட்டலில் உள்ள சமையல் கழிவுகள், கழிப்பிடக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை சின்னார் ஆற்றில் கலக்க விட்டுள்ளனர். புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.