இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு, மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காயம் காரணமாக விஜய்க்கு பதிலாக, தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.