கோலிவுட்டிலிருந்து பாலிவுட், ஹாலிவுட் எனப் பெரிய ரவுண்டு அடித்துக்கொண்டிருக்கும் தனுஷ், மல்லுவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்தமுறை நடிகராக அல்ல, தயாரிப்பாளராக.'என்னு நிண்டே மொய்தீன்', 'சார்லி' ஆகிய திரைப்படங்களில் நடித்த டோவினோ தாமஸ் நடிக்கும் `தரங்கம்' திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.