மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிபவர் மகேந்திர லோடி. கோர்ட் வளாகத்துக்குள் இருந்த பெண்களிடம் பாலியல்ரீதியாக பார்ப்பது, சீண்டல்கள் செய்வது என தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். ஆத்திரமடைந்த பெண்கள் கோர்ட் வளாகத்துக்குள்ளேயே மகேந்திர லோடியை செருப்பைக் கழற்றி விரட்டி, விரட்டி அடித்துள்ளனர்.