பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்ற அமைப்பில் (OECD) இடம்பெற்றிருக்கும் 35 நாடுகளில், ஆஸ்திரேலியா உட்பட இரண்டு நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இல்லை. இப்போது, ஆஸ்திரேலியா இந்தக் குறையை நிவர்த்திசெய்யும் வகையில், சொந்தமாக விண்வெளி நிறுவனம் ஒன்றைத் திறக்க முடிவுசெய்துள்ளது.