பொதுத்துறை வங்கிகளின் கடன் அளிக்கும் திறனை அதிகரிக்க அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும், வங்கித் துறையில் மேற்கொள்ளப்பட உள்ள சீர்திருத்தங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.