நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவில் உள்ள ஏர்செல் நிறுவனங்களை மூடவிருப்பதாக நாடு முழுவதும் நேற்று தகவல் பரவியது. ஆனால், ’ஏர்செல் தமிழகத்தில் இருக்கும். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி’ என்று வாடிக்கையாளர்களுக்கு ஏர்செல் குறுந்தகவல்கள் அனுப்பி வருகிறது.