23 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் தொடங்கியது. இன்று நடைபெறும் கூட்டத்தில் சுமார் 200 பொருள்களுக்கு மேல் வரி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று கூட்டங்களில் சுமார் 100 பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டது.